உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது
அறிவிப்பை எதிர்த்து திமுக உட்பட 12 பேர் தொடுத்த வழக்கின் மீதான விசாரணையில், 9 மாவட்டங்கள் தவிர்த்த மீத மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாமா என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும் 2 மதியம் மணிக்குள் இதற்கான பதிலை தேர்தல் ஆணையம் அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
இதில், மதியம் 2 மணியளவில் பதிலளித்த தேர்தல் ஆணையம், 9 மாவட்டங்கள் ( வார்டு வரையறை செய்யப்படாத ) தவிர்த்து மீதமுள்ள தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் நடத்தலாம் என்று பதில் அளித்திருக்கிறது.