நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தற்போது

நாட்டில் புதியதாக வாகனம் வாங்க திட்டமிடும் பலரிடம் பிஎஸ்-4 வாகனம் மீது குழப்பம் உள்ளது. அவர்கள் பிஎஸ்-6 வாகனங்களை வாங்குவதற்காக காத்திருக்கின்றனர். அதனால் தான் வாகன விற்பனையில் மந்தகதி நிலவுகிறது என்று அவர் கூறினார்.

வரலாறு காணாத வகையில் வாகன விற்பனை சரிவைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர்கள், அரசுத் துறை செயலாலர்கள், உயர் அதிகாரிகளுக்கு 10 ஆண்டுக்கு ஒருமுறை வாகனங்கள் வாங்கப்படுவதற்கான தடை நீக்கப்படுவதாக அறிவித்தார்.

மேலும் பேசிய அவர், 2020 மார்ச் 31க்கு முன் வாங்கப்படும் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும். பிஎஸ் 6 எஞ்சின் மாசு விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பிஎஸ் 4 எஞ்சின் வாகனங்களை இயக்குவது சட்டத்திற்கு புறம்பானதாக மாறிவிடும் என்ற ஊகங்களை தள்ளுபடி செய்ய விரும்புவதாகவும் கூறினார்.