1979ஆம் ஆண்டு ஈரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 52 அமெரிக்கர்கள் ஓராண்டு மேல்

1979ஆம் ஆண்டு ஈரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 52 அமெரிக்கர்கள் ஓராண்டு மேல் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இதனை நினைவூட்டும் வகையில், 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈரானிய விமானம் அமெரிக்கப் போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த 66 குழந்தைகள் உள்பட 290 பேர் கொல்லப்பட்டனர். இதனை நினைவூட்டவே ரவுகானி, 290 என்ற எண்ணையும் நினைவில் கொள்ளவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.