ஈரானில் 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
52 என்ற எண்ணைக் கூறும் அமெரிக்கா 290 என்ற எண்ணையும் நினைவில் வைத்துக்கொள்ளட்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். சுலைமானியின் கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரான் மறுநாளே பாக்தாத்தில் அமெரிக்காவின் ராணுவத் தளத்தில் இரண்டு ஏவுகணைகளை வீசித் தாக்கியது.
அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானில் 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, “ஒருபோதும் ஈரானை மிரட்டும் வேலையை வைத்துக்கொள்ள வேண்டாம்.” என ட்ரம்பை எச்சரித்துள்ளார். 52 என்ற எண்ணை குறிப்பிடுபவர்கள் 290 என்ற எண்ணையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.