Ukraine Plane Crash 2020: 180 பயணிகளின் கதி என்ன ஆனது? பயங்கர விபத்தில் சிக்கிய உக்ரைன் விமானம்

உக்ரைன் விமானம் ஒன்று ஈரான் நாட்டில் விபத்திற்கு உள்ளானதில் 180 பயணிகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது.


உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ’போயிங் 737’ விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டது. அதில் 180 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பயணித்தனர்.


இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.